உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோதனை சாவடியில் ஆய்வாளரை தாக்கிய வடமாநில ஓட்டுநர் கைது

சோதனை சாவடியில் ஆய்வாளரை தாக்கிய வடமாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி:பூந்தமல்லி சோதனை சாவடியில், வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளரை தாக்கிய, உத்தர பிரதேச மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை- - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், வாகன சோதனை சாவடி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் சந்திரன், 50, வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாதது தெரிய வந்தது. லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த உ.பி.,யை சேர்ந்த லாரி ஓட்டுநர் முகமது அப்துல் சாகிப், 22, லாரியில் இருந்து கீழே இறங்கி, ஆய்வாளர் சந்திரனை தாக்கினார். அங்கிருந்தவர்கள் முகமது அப்துல் சாகிப்பை பிடித்து, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ