மேலும் செய்திகள்
மகன் மாயம்: தந்தை புகார்
13-Aug-2025
கும்மிடிப்பூண்டி:தனியாக துாங்கி கொண்டிருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, தேர்வாய்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை, 80. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக துாங்கிக் கொண்டிருந்தார். அருகில் வசிக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சஞ்சய், 20, என்பவர், வீட்டிற்குள் நுழைந்து, மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மூதாட்டி கூச்சலிட்டதால், அங்கிருந்து தப்பிச் சென்றார். வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், சஞ்சயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
13-Aug-2025