மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த எலக்ட்ரிஷியன் பலி
01-Aug-2025
ஈக்காடு:திடீரென மயங்கி விழுந்து, செவிலியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நிவேதிதா என்ற ஏஞ்சல், 24. திருச்சியில் 'ஹோம்கேர்' என்ற தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். பிற்பகல் 3:00 மணியளவில், வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு அமர்ந்திருந்தவர், திடீரென மயங்கி விழுந்தார். பெற்றோர் அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
01-Aug-2025