உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடில் பழுதான உயர்கோபுர மின்விளக்கு

பழவேற்காடில் பழுதான உயர்கோபுர மின்விளக்கு

பழவேற்காடு:பழவேற்காடு பஜார் பகுதியில், லைட்ஹவுஸ்குப்பம், கோட்டைக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு பிரியும் சாலைகளின் சந்திப்பில், கடந்த, 2015ல் உயர்கோபுர மின்விளக்கு பொருத்தப்பட்டது.கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் பழுதானதை தொடர்ந்து, 70 அடி உயர கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் ரோப் உதவியுடன் கீழே இறக்கப்பட்டன.அதே சமயம் சரிசெய்து, மீண்டும் கம்பத்தின் உயரத்தில் பொருத்தாமல் அப்படியே போடப்பட்டது. கடந்த, மூன்று ஆண்டுகளாக மின்விளக்கு வசதியில்லாமல் பழவேற்காடு பஜார் பகுதி இருண்டு கிடக்கிறது.மாலை நேரங்களில், பஜார் பகுதியில் மீனவ மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்லும் நிலையில், அங்கு மின்விளக்கு வசதியில்லாமல் இருண்டு கிடப்பது பெரும் சிரமத்தினை ஏற்படுத்துகிறது.உயர்கோபுர மின்விளக்குகள் சீரமைக்கப்படாததால், வியாபாரிகள், மீனவ மக்கள், சுற்றுலா பயணியர் என பல்வேறு தரப்பினரும் பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர். மேற்கண்ட உயர்கோபுர மின்விளக்கை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ