உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

பழவேற்காடில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

பழவேற்காடுஆழ்கடலில் வசிக்கும் ஆமை வகைகளில் ஒன்றான 'ஆலிவ் ரிட்லி', வகை, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் - ஏப்ரல் மாதங்களில், கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளன.கடலினை சுத்தம் செய்வதில் இவற்றின் பங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் அவற்றை பாதுகாப்பதில் வனத்துறையினர் முக்கியத்துவம் தருகின்றனர்.வங்காள விரிகுடா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பழவேற்காடு பகுதியிலும் 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் முட்டையிடுகின்றன.ஒவ்வொரு ஆண்டும், பழவேற்காடு வனத்துறையினர், 'ஆலிவ் ரிட்லி' ஆமையின் முட்டைகளை பாதுகாப்பாக சேகரித்து, குஞ்சு பொரித்தபின், அவற்றை கடலில் கொண்டு விடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.ஒரு வாரமாக, சென்னை வனஉயிரின காப்பாளர் மணிஷ் மீனா, அறிவுறுத்தலின்பேரில் வனச்சரக அலுவலர் எக்ஸ்.ரூஸப் வெஸ்லி தலைமையில், பழவேற்காடு வனத்துறையினர் முகத்துவாரம் பகுதியில் இருந்து காட்டுப்பள்ளி வரை கடற்கரை பகுதிகளில் ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இவற்றை பழவேற்காடு - கூனங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.இதற்காக அங்கு, 100க்கும் அதிகமான குழிகளில் ஆமை,கூடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்படும் முட்டைகளை அந்த குழிகளில் வைத்து, மண் மூடி பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதுவரை, 670 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.ஆமை கூடுகளில் உள்ள முட்டைகள், 45 நாட்களில் குஞ்சுபொரித்த பின், அவை கடலில் விடப்படும் என, வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை