உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி:மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 40; கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, கன்னியம்மன் கோவில் பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி உயிரிழந்தார். வழக்கு பதிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ