உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மது போதையில் ஒருவர் உயிரிழப்பு

மது போதையில் ஒருவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் பாக்யராஜ், 45. கருத்து வேறுபாடு காரணமாக, 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார். நேற்று மதியம், தேர்வழி கிராமத்திற்கு உட்பட்ட தையந்தோப்பில், மதுபோதையில் இறந்து கிடந்தார். உடலை கைபற்றிய போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மது போதையில், நாக்கு வறண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை