உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

பொதட்டூர்பேட்டை: இருசக்கர வாகனத்தில் சென்றவர், டிராக்டர் மீது மோதியதில் பலியானார். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த காவெட்டிபுரத்தை சேர்ந்தவர் கேசய்யா, 52. இவர், நேற்று பொதட்டூர்பேட்டை அடுத்த பாண்டரவேடு கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டி ற்கு வந்து இருந்தார். அங்கிருந்து பொதட்டூர்பேட்டைக்கு மாமியார் லலிதா, 70, மற்றும் அவரது அண்ணன் மகள் மீனாட்சி, 30, ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். ஜங்கம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில், கேசய்யாவின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் கேசய்யா, சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த லலிதா மற்றும் மீனாட்சி ஆகியோர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி