உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலத்தகராறில் கோஷ்டி மோதல் ஒருவர் படுகாயம்; 4 பேருக்கு வலை

நிலத்தகராறில் கோஷ்டி மோதல் ஒருவர் படுகாயம்; 4 பேருக்கு வலை

திருத்தணி:திருத்தணி அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேந்தவர் வெங்கடேசன், 40. இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் வெங்கடேசன், 45, என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. நேற்று வெங்கடேசன், தன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது, கோபால் மகன் வெங்கடேசன், உறவினர்களான குணா, பார்த்திபன், தேவராஜ் ஆகியோருடன் வந்து, மின்மோட்டாரின் மின் ஒயரை துண்டித்தார்.இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், வெங்கடேசனை கல்லால் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை