உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே 1 வயது ஆண் குழந்தை, தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. கடம்பத்துார் ஒன்றியம், செஞ்சி பானம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 30. இவரது மனைவி ஈஸ்வரி, 28. தம்பதிக்கு சுபாஷினி, 7 மற்றும் ஜெய்கிருஷ், ௧, இரு குழந்தைகள். நேற்று காலை வீட்டின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதை கண்ட பெற்றோர், குழந்தையை மீட்டு கடம்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார். கடம்பத்துார் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ