உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணி விரைந்து முடிக்க உத்தரவு

கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணி விரைந்து முடிக்க உத்தரவு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் நடைபெற்று வரும், கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகளை, விரைந்து முடிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் நகராட்சியில் சேகரமாகும் கழிவு நீர், புதை குழாய் வழியாக புட்லுார் ஏரி அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த மையம் தற்போது செயலிழந்து விட்டதால், அதற்கு அருகிலேயே, 10.48 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ராஜாஜி சாலையில் குறுகலான இடத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு பதிலாக,வேடங்கிநல்லுாரில், நகராட்சி சார்பில் 33 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. அப்பணிகளை, கலெக்டர் பிரதாப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணி விபரங்களை நகராட்சி கமிஷனர் தாமோதரனிடம் கேட்டறிந்த கலெக்டர், பணிகளை விரைந்து முடிக்குமாறு, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி