உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க தேவையான உதவி செய்ய உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க தேவையான உதவி செய்ய உத்தரவு

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேர்தலை எளிதில் அணுகுவது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.அதில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்காளராக பதிவு செய்வது குறித்தும், ஓட்டுச்சாவடிகளில் எளிதில் ஓட்டளிப்பது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், எளிதில் வாக்காளராக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய 'SAKSHAM' என்ற செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இச்செயலி வாயிலாக, ஓட்டுச்சாவடியில் சக்கர நாற்காலிகள், உதவியாளர் உள்ளிட்ட இதர உதவிகள் பெற பதிவு செய்ய இயலும் என, அறிவுறுத்தினார்.மேலும், ஓட்டுச்சாவடிகளில் சாய்தள பாதை, சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர்களை நியமித்து, மாற்றுத்திறனாளிகள், கடந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்த விபரங்களை சர்வே எடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் ஓட்டு செலுத்தாதோரின் தேவைகளை ஆராய்ந்து, அவர்கள் ஓட்டு செலுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ