உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பாழ் தடப்பெரும்பாக்கத்தில் மக்கள் தவிப்பு

ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பாழ் தடப்பெரும்பாக்கத்தில் மக்கள் தவிப்பு

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், 35ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலை அருகே இந்த கட்டடம் அமைந்து உள்ளது.தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சாலையின் உயரம் அதிகரித்து, ஊராட்சி அலுவலக கட்டடம் தாழ்வான நிலைக்கு சென்றது. மழை பெய்தால், அலுவலக கட்டடத்தை சுற்றிலும் மழைநீர் தேங்குகிறது.கடந்த சில தினங்களாக பெய்த மழையால் குளம்போல் தேங்கிய மழைநீர் அலவலக கட்டடத்திற்குள் புகுந்து உள்ளது. கட்டடத்தின் முகப்பு பகுதியில் ஒரு அடிக்கு மழைநீர் தேங்கி இருப்பதால், அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தவும், மழைநீர் தேங்கியிருப்பது, குடிநீர், சாலை, மின்விளக்கு குறித்த குறைகளை தெரிவிக்கவும் பொதுமக்கள் அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.கட்டடத்தின் உள்பகுதியிலும் மழைநீர் புகுந்து உள்ளதால், அங்குள்ள ஆவணங்களின் நிலையும் கேள்விக்குறியாக இருக்கிறது. அதிகளவில் குடியிருப்புகளை கொண்ட ஊராட்சியாக இருந்தும், இதுவரை புதியதாக அலுவலக கட்டடம் அமைக்க திட்டமிடவில்லை. தற்போது உள்ள இடம் கோவில் நிலம் என கூறப்படுவதால், ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில் பல்வேறு வீட்டுமனை பிரிவுகளில் உள்ள பொது இடத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை