மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலகம் திறப்பு
30-Nov-2024
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் இருந்த ஊராட்சி அலுவலகம் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது.இதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில்கீழ், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, 2020ம் ஆணடுm ஜனவரி மாதம் துவங்கி நடந்து வருகிறது.இந்த பணிகளை மூன்று மாதத்திற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருவதாக ஒன்றிய பொறியாளர் தெரிவித்திருந்தார்.ஆனால், நான்காண்டுகளாகியும் ஊராட்சி அலுவலக பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால்m தற்போது கார் பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணியை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30-Nov-2024