உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதடைந்த கட்டடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம்

பழுதடைந்த கட்டடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சியில், அகூர் கிராமம், அகூர் காலனி, நத்தம் உட்பட நான்கு கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அகூர் கிராமம் நுழைவாயிலில், 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.இந்த அலுவலகத்திற்கு மேற்கண்ட கிராமத்தினர், சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக வந்து செல்வர்.மேலும், ஊராட்சி நிர்வாகத்தின் ஆவணங்கள் மற்றும் மின்விளக்கு போன்ற பொருட்களையும், ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், இக்கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் விரிசல் அடைந்தும், மழைக்காலத்தில் தண்ணீர் கசிந்தும் ஆவணங்கள் நனைந்து விடுகின்றன.கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பல மாதங்களாக ஊராட்சி அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.தற்போது, ஊராட்சி மன்ற அலுவலகம், அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் இயங்கி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ