உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காப்புக்காட்டில் குப்பை கொட்டிய ஊராட்சி வாகனம் சிறைபிடிப்பு

காப்புக்காட்டில் குப்பை கொட்டிய ஊராட்சி வாகனம் சிறைபிடிப்பு

பள்ளிப்பட்டு:காப்புக்காட்டில் குப்பை கொட்டிய ஊராட்சி துாய்மை வாகனம், வனத்துறை ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்டது. பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் புல்லுார், நெடியம், நொச்சிலி, கோணசமுத்திரம், வெங்கல்ராஜிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்புக்காடுகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. வனக்காவலர்கள் ரோந்து மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நெடியம், பெருமாநல்லுார் அடுத்த புல்லுார் காப்புக்காடுகளில் சமீபகாலமாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. காப்புக்காடுகளில் அத்துமீறி குப்பை கொட்டுபவர்களை, வனத்துறையினர் காண்காணித்து வருகின்றனர். நேற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெருமாநல்லுார் ஊராட்சியின் துாய்மை வாகனம் ஒன்றில் இருந்து குப்பை கொட்டப்படுவது தெரிந்தது. வனத்துறையினர், ஊராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர். காப்புக்காட்டில் குப்பை கொட்டக்கூடாது என, துாய்மை பணியாளர்களை எச்சரித்து, வாகனத்தை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை