உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இடியும் நிலையில் நிழற்குடை பேருந்து பயணியர் அச்சம்

 இடியும் நிலையில் நிழற்குடை பேருந்து பயணியர் அச்சம்

பொன்னேரி: பெரியகரும்பூர் கிராமத்தில் உள்ள நிழற்குடை சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், பயணியர் அச்சத்தில் தவிக்கின்றனர். பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து உள்ளது. கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும், உள்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் நிழற்குடை கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பயணியர் நிழற்குடை உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, சேதமான நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ