உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இன்றி பயணியர் தவிப்பு

நிழற்குடை இன்றி பயணியர் தவிப்பு

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே அமைந்துள்ளது புதுவாயல் சந்திப்பு. அங்கு, ஆந்திரா, சென்னை மற்றும் பெரியபாளையம் நோக்கி செல்லும் மூன்று சாலைகள் சந்திக்கின்றன.சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், பள்ளி, கல்லுாரிகள் செல்பவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என, தினசரி ஆயிரக்கணக்கான பயணியர், மூன்று திசை சாலைகளிலும் காத்திருந்து பேருந்து, ஷேர் ஆட்டோ பிடித்து செல்வது வழக்கம்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சந்திப்பில், மூன்று மார்க்கத்திலும் பயணியர் நிழற்குடை ஒன்றுகூட இல்லை. இதனால், சாலையோரம் மழையிலும் வெயிலிலும் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பயணியரின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அந்த சந்திப்பில் நிழற்குடைகள் நிறுவ வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ