உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் தவிப்பு

மீஞ்சூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் தவிப்பு

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கக்கன் நகர், ராமரெட்டிப்பாளையம், அரியன்வாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. தெருச்சாலைகளிலும், குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்த நிலையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மழைநீர் செல்வதற்காக, சாலைகள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளன. வாகனங்கள் அதில் சிரமத்துடன் பயணிக்கின்றன. பேரூராட்சி நிர்வாகத்தினர் மோட்டார்கள் மூலம், தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைநீர் செல்ல வழியின்றி கிடப்பதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை