உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 398 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 398 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில், 398 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறை தீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 59, சமூக பாதுகாப்புதிட்டம் 45, வேலைவாய்ப்பு வேண்டி 18, பசுமைவீடு, அடிப்படை வசதி கேட்டு 21 மற்றும் இதரதுறை 255, என மொத்தம் 398 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். பின், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு, 6.27 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன செயற்கை உறுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். --------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ