மேலும் செய்திகள்
செட்டிக்குளம் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கல்
06-Jun-2025
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், கடந்த, 1987ல் வடசென்னை அனல் மின்நிலையம் அமைப்பதற்காக, அரசு மற்றும் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அங்கு வசித்து வந்த, 546 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்.அவர்களுக்கு, அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே, மாற்று இடம் வழங்கப்பட்டது. அதில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இடம் பெயர்ந்து, 38ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அரசு ஒதுக்கிய வீட்டுமனைக்கு பட்டா வழங்கப்படாமல் இருக்கிறது.இதனால் அவர்களுக்கு அரசின் குடியிருப்பு திட்டங்கள் கிடைக்காமல் உள்ளன. மேலும், வங்கி கடன் பெற்று மேலும் வீடு கட்ட முடியாத நிலையும் இருக்கிறது. இது தொடர்பாக அத்திப்பட்டு ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் கதிர்வேல், பொன்னேரியில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மனு அளித்து உள்ளார்.
06-Jun-2025