மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் பெயரில் ரூ.230 கோடி மோசடி
07-Jun-2025
திருத்தணி, திருத்தணி முருகன் கோவில் மற்றும் 29 உபகோவில்களில், 230க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், 17 ஆண்டுகளுக்கு மேல் கடைநிலை ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு கோவில் நிர்வாகம் பதவி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. நேற்று தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கம், திருத்தணி கிளை சார்பில் தலைவர் குப்பன் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், கோவில் இணை ஆணையர் ரமணியை நேரில் சந்தித்து மனு வழங்கினர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 17 ஆண்டுகள் பணிபுரிந்து நிறைவடைந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தகுதி அடிப்படையில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் வழங்கும் சிறப்பு ஊதியம், அந்தந்த ஆண்டிலேயே வழங்க வேண்டும்.கோவில் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தாக்குதல் நடந்தால், கோவில் உயரதிகாரி வாயிலாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற இணை ஆணையர் ரமணி, ''விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
07-Jun-2025