உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்வீட்டு மனை பட்டா கேட்டு ரகுநாதபுரம் கிராமவாசிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருத்தணி வட்டம் நெடும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் கிராமவாசிகள் நேற்று கலெக்டர் அலுலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:நெடும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபரம் கிராமத்தில் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருந்ததியர், இருளர் காலனி, இடிக்கர் மற்றும் ராஜாக்கள் என நான்கு பிரிவு மக்கள் ஒற்றுமையாக வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு திருமணமாகி விட்டதால், அவர்கள் தங்குவதற்கு இடம், வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, அனைவருக்கும் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !