மேலும் செய்திகள்
பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
15 minutes ago
இடியும் நிலையில் நிழற்குடை பேருந்து பயணியர் அச்சம்
17 minutes ago
மீனவர்களின் வாரிசுதாரருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி
17 minutes ago
திருவாலங்காடு: திருவாலங்காடில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால், திருவாலங்காடு மக்கள் பீதியில் உள்ளனர். திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சன்னிதி தெரு, தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி உள்ளிட்ட பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதாக, குடியிருப்பு மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, குடியிருப்பு மக்கள் கூறியதாவது: திருவாலங்காடு ஊராட்சியில் பி.டி.ஓ., அலுவலகம், வடாரண்யேஸ்வரர் கோவில், காளியம்மன் கோவில், பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இவை, தெருவோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும்போது திடீரென சாலையின் குறுக்கே பன்றிகள் ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, குடியிருப்பு மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ள பன்றிகளை பிடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
15 minutes ago
17 minutes ago
17 minutes ago