உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் பைக் ரேஸ் மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் பைக் ரேஸ் மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

மீஞ்சூர்: மீஞ்சூர் - வண்டலுார் இடையே, 62கி.மீ., தொலைவிற்கு, 400 அடி வெளிவட்ட சாலையில், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வரும் இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.பி.எம்.டபுள்யூ, யமஹா, கேடிஎம்., என உயர்ரக பைக்குகளில் அதிவேகமாக பயணிப்பது, 'வீலிங்' செய்வது, ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் போட்டி போடுவது போன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.கடந்த ஜூன் மாதம், 15ம் தேதி பைக், ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் விபத்தில் சிக்கி இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இளைஞர்களை எச்சரித்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.இந்நிலையில், நேற்று மீஞ்சூர் சீமாவரம் பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசம் செய்ய குவிந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று ஆறு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இளைஞர்களை விசாரித்ததில் அவர்கள் சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், பல்வேறு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரிந்தது.அதையடுத்து மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. அவர்களிடம் 'இனி ஒருமுறை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பைக் பறிமுதல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ