மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்ட் சுவர்கள் விளம்பரத்தால் அலங்கோலம்
29-Apr-2025
பொன்னேரி,பொன்னேரி உலகநாத நாரயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் சுற்றுச்சுவர், பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.கடந்த மாதம் 18ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, பொன்னேரி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, தி.மு.க,வினர், மேற்கண்ட கல்லுாரி சுற்றுச்சுவர் முழுதும் போஸ்டர்களை ஒட்டினர்.தி.மு.க.,வை தொடர்ந்து, தற்போது அ.தி.மு.க.,வினரும், அக்கட்சியின் பொதுச்செயலரின் பிறந்த நாள் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.மேலும், பல்வேறு வணிக நிறுவனங்கள், தனியார் கல்லுாரிகள் தங்களது விளம்பர போஸ்டர்களை கல்லுாரி சுற்றுச்சுவரில் ஒட்டி வருகின்றன. இது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கல்லுாரி சுற்றுச்சுவரில் போஸ்டர்கள் அதிகரித்து வருகிறது. தி.மு.க., பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்தது. அ.தி.மு.க, மற்றும் வணிக நிறுவனங்கள் பின்தொடர்கிறது. அடுத்து சினிமா போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. இதை கல்லுாரி நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
29-Apr-2025