உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி:பொன்னேரி அரசு கலைக்கல்லுாரியில், பல்வேறு பாடப்பிரிவுகளில், கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த நான்கு நாட்களாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 25க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாவது:தமிழகம் முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், 2,000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள், 10ஆண்டுகளுக்கும் மேலாக, குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றோம்.யு.ஜி.சி., பரிந்துரையை ஏற்று, கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 50,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் தரவேண்டும்.சிறப்பு டி.ஆர்.பி., தேர்வு வாயிலாக, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.செட் தகுதி தேர்வு மற்றும் அரசாணை எண்: 56ஐ, உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்தியாவிலேயே உயர் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு, கவுரவ விரிவுரையாளர்களின் பங்கு அளப்பரியது. தமிழக உயர்கல்வித்துறை இதை உணரவேண்டும்.இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !