மேலும் செய்திகள்
மாணவிக்கு தொந்தரவு வாலிபர் கைது
19-Jan-2025
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே, காட்டுப்பாக்கத்தில் வசிக்கும் 8 வயது சிறுமி, நேற்று தன் வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றார்.அப்போது, அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர், வீட்டின் கேட்டை திறந்தபோது, அவர் வளர்க்கும் 'ராட்வைலர்' நாய், வெளியே ஓடி சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கால் தொடையில் கடித்துள்ளது.காயமடைந்த சிறுமி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சிறுமியின் பெற்றோர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தில் 'ராட்வைலர்' நாய்களை வளர்ப்பது, இறக்குமதி செய்வது, இனப்பெருக்கம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
19-Jan-2025