உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்களின் கோரிக்கையை ஏற்று இடம் மாறும் தபால் நிலையம்

மக்களின் கோரிக்கையை ஏற்று இடம் மாறும் தபால் நிலையம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள சரண்யா நகர் பகுதியில், வாடகை கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வரும் மக்கள், செங்குத்தாக உள்ள இரும்பு படிகளில் அச்சத்துடன் ஏறி, இறங்க வேண்டிய நிலையில் உள்ளனர். குறிப்பாக, முதியவர்களும், பெண்களும் கடும் சிரமத்துடன் தபால் நிலையம் சென்று வருகின்றனர். மக்களின் சிரமத்தை கருதி, பாதுகாப்பான படிகள் அமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு தபால் நிலையம் மாற்றப்பட வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மக்களின் சிரமம் கருதி, எதிரே உள்ள வாடகை கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் தபால் நிலையம் மாற்றப்பட உள்ளது. அடுத்த 10 நாட்களில் புதிய கட்டடத்தில் தபால் நிலையம் மாற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை