உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பல்லாங்குழியான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் சிரமம்

பல்லாங்குழியான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் சிரமம்

திருப்பாச்சூர்:திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர். இங்கிருந்து கடம்பத்துார் வழியாக கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியே தினமும் 25,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகி்னறன.இந்த நெடுஞ்சாலை பழைய திருப்பாச்சூர், பிரையாங்குப்பம், கடம்பத்துார், புதுமாவிலங்கை உட்பட பல பகுதிகளில் சாலை சேதமடைந்துமோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி