உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசை பேருந்து நிலைய நுழைவாயிலில் பள்ளங்கள்

திருமழிசை பேருந்து நிலைய நுழைவாயிலில் பள்ளங்கள்

திருமழிசை:திருமழிசை பேருந்து நிலைய நுழைவாயில் பள்ளங்களாக மாறியுள்ளதால், மாநகர பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வராமல் வெளியிலேயே பயணியரை இறக்கி விடுகின்றன.திருமழிசை பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, தி.நகர், தாம்பரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு தினமும், 50க்கும் மேற்ப்பட்ட மாநகர பேருந்துகள் சென்று வருகின்றன.மேலும், திருமழிசை வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் என தினமும், 200க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.இந்நிலையில், பேருந்து நிலைய நுழைவாயில் பகுதி மிகவும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் நுழைவு பகுதி குளம் போல் மாறுவதால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.நுழைவாயில் சேமதடைந்துள்ளதால், திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு செல்லும் மாநகர பேருந்துகள், நிலையத்திற்கு உள்ளே வராமலேயே வெளிப்புறமே பயணியரை இறக்கிவிட்டு செல்கின்றன.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வரும் வகையில், சேதமடைந்த நுழைவாயில் பகுதியை சீரமைத்து தர வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி