உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சூறை காற்றால் அறுந்த மின்கம்பி 1 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

சூறை காற்றால் அறுந்த மின்கம்பி 1 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

திருவாலங்காடு,சென்னை மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் நோக்கி புறநகர் மின்சார ரயில், நேற்று மதியம் 1:20 மணிக்கு புறப்பட்டது.திருவள்ளூர் அடுத்த மணவூர் ரயில் நிலையத்திற்கு 2:50 மணிக்கு வந்த ரயில், திருவாலங்காடு ரயில் நோக்கி புறப்பட்ட போது, சூறைக்காற்று வீசியதுடன், இடியுடன் கனமழை பெய்தது. இதனால், மணவூர் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து வீசிய சூறைக்காற்றால், மின்சார ரயிலின் இன்ஜினுடன், இணைப்பு ஏற்படுத்தும் மின்கம்பி அறுந்து விழுத்தது. இதனால், ஒரு மணி நேரம் அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது.இதனால், ரயிலில் பயணித்த 1,500க்கும் மேற்பட்டோர் அவதிப்பட்டனர். பின், மூன்றாவது தண்டவாளமான 'பாஸ்ட் லைனில்' வந்த புறநகர் ரயிலில் பயணியர் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி