உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

திருத்தணி: ஆரம்ப துணை சுகாதார நிலையம் பழுதடைந்த கட்டடத்தில் இயங்குவதால், பெண்கள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருத்தணி ஒன்றியம் கோரமங்கலம் காலனியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டடம் சேதமடைந்ததால், ஓராண்டுக்கு முன், அதனருகே உள்ள புதுவாழ்வு மையம் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த கட்டடத்தின் நுழைவாயில் மற்றும் துாண்கள் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இருப்பினும், இக்கட்டடத்தில் தான் செவிலியர்கள், கர்ப்பிணியருக்கு தடுப்பூசி, ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஏற்கனவே உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் என, செவிலியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை