உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருநங்கையருக்கு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசு

திருநங்கையருக்கு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசு

திருவள்ளூர்:திருவள்ளூரில் திருநங்கையர் தினத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருநங்கையர் தினம் முன்னிட்டு பாட்டு, பேச்சு, நடனம் மற்றும் அழகி போட்டி நடந்தது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் நடந்த போட்டியில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போட்டியில் வெற்றி பெற்றோருக்கு கலெக்டர் பிரதாப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி, சமூக நல அலுவலர் வாசுகி, திருநங்கையர் கூட்டமைப்பு தலைவர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ