உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு

கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு

சென்னை, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகார் குமார் கார்வர், 32. இவர் மதுரவாயல் வக்கீல் தோட்டத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், நான்கு மாதங்களாக தங்கி, குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், உ.பி., யில் உள்ள இவரது மனைவி ஹகன்ஷா, நேற்று முன் தினம் இரவு பிரகார் குமார் கார்வரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், நீண்ட நேரமாகியும் போன் எடுக்காததால் அவருடன் பணிபுரியும் சோனி என்பவருக்கு ஹகன்ஷா தகவல் தெரிவித்தார். மதுரவாயல் போலீசார் சென்ற போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் பின்பக்கம் உள்ள பால்கனி கதவு திறந்த நிலையில் இருந்தது.அவ்வழியாக உள்ளே சென்று பார்த்த போது கழிப்பறையில், பிரகார் குமார் கார்வர் தலையில் பிளாஸ்டிக் கவர் மாட்டப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ