உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீடு புகுந்து 34 சவரன் திருடியவருக்கு காப்பு

வீடு புகுந்து 34 சவரன் திருடியவருக்கு காப்பு

பட்டாபிராம்,::ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, தேவி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவரது மனைவி லாவண்யா, 25. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.கடந்த ஜூன் 5 ம் தேதி, இருவரும் வேலைக்கு சென்ற பின், அவரது பெற்றோர், அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர். அன்று இரவு, மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 34 சவரன் நகை திருடு போனது தெரிந்தது.இது குறித்து விசாரித்த பட்டாபிராம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட சேலையூர் பதுவஞ்சேரி, நேசமணி தெருவைச் சேர்ந்த சகாயராஜ், 47, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை