உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி வளாகத்தில் மருத்துவமனை எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

அரசு பள்ளி வளாகத்தில் மருத்துவமனை எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

பேரம்பாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளி வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய மருத்துவமனை கட்டும் பணி துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடம்பத்துார் மேற்கு வட்டார காங்., தலைவர் சதீஷ், கடம்பத்துார் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொருளாளர் ரமேஷ் மற்றும் 30க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். பள்ளி வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கட்டினால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி கல்வி பாதிக்கப்படும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மப்பேடு பொறுப்பு இன்ஸ்பெக்டர் பாரூக் மற்றும் மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு நடத்தினர். போலீசார் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவியுங்கள் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை