உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்வெட்டை கண்டித்து திருப்பாச்சூரில் ஆர்ப்பாட்டம்

மின்வெட்டை கண்டித்து திருப்பாச்சூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பாச்சூர்:திருப்பாச்சூரில் மின்வெட்டை கண்டித்து நேற்று முன்தினம் இரவு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர். இங்குள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக அறிவிப்பில்லாத மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இதனால் பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடு ஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் மக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். பின் மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு பகுதியில், புஞ்செய் ஆனாதினம், சர்வே எண்:2/234ல், 15 குடும்பத்தினர் வீடுகள் கட்டி, 17 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு, மேற்கண்ட குடும்பத்தினரிடம் வருவாய் துறையினர் சமரசம் பேசி, உங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அருகே வீடுகள் கட்டித்தருகிறோம் என கூறி, தற்காலிகமாக இரும்பு தகடுகளால் வீடுகள் அமைத்து கொடுத்தனர். ஆனால் வீடுகள் கட்டியுள்ள இடத்திற்கு பட்டா வழங்காமல் வருவாய் துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக, நேற்று 15 குடும்பத்தினரும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை