உங்களுடன் ஸ்டாலின் முகாம் 15 பேருக்கு உதவிகள் வழங்கல்
திருத்தணி:உங்களுடன் ஸ்டாலின் முகாமில், 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருத்தணி நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், தாசில்தார் மலர்விழி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தார். மேலும், 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகளை, எம்.எல்.ஏ., சந்திரன் வழங்கினார். முகாமில், 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. ஊத்துக்கோட்டை பூண்டி ஒன்றியம், பென்னலுார்பேட்டையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜேஷ் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் மக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.