உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 403 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 403 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 403 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 92, சமூக பாதுகாப்பு திட்டம் 29, வேலைவாய்ப்பு வேண்டி 42, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 36 மற்றும் இதர துறை 204 மனுக்கள் என, மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை