உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதர் மண்டி சீரழியும் காவலர் குடியிருப்பு

புதர் மண்டி சீரழியும் காவலர் குடியிருப்பு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் டி4 காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கான குடியிருப்புகள், பள்ளிப்பட்டு சாலை மற்றும் ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில் செயல்பட்டு வந்தன.பஜார் பகுதியில் இருந்து காவல் நிலையம், சோளிங்கர் சாலையில் இடம் மாற்றம் செய்யப்பட்டதும், வெள்ளாத்துார் கூட்டு சாலை அருகே புதிய குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், பள்ளிப்பட்டு சாலை மற்றும் பஜார் பகுதியில் கைவிடப்பட்ட குடியிருப்பு வளாகங்கள், தற்போது பாமரிப்பு இன்றி பாழடைந்து வருகின்றன. நகரின் நடுவே, பாழடைந்து கிடக்கும் இந்த வளாகத்தில் புதர் மண்டியுள்ளது.இந்த வளசாகத்தில், வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையும் உள்ளது. பாழடைந்துள்ள கட்டடங்கள் உருக்குலைந்துள்ளதால், எந்த நேரத்திலும் விபரீதம் ஏற்படக்கூடும்.இதனால், பாதுகாப்பு கருதி, இந்த வளாகத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ