திருத்தணியில் மழை
திருத்தணி,திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை முதலே திருத்தணி பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. மதியம், 12:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். மேலும் பல பகுதிகளில் மின்சாரம்துண்டிக்கப்பட்டது. திருத்தணி அரக்கோணம் சாலை, ம.பொ.சி., சாலை, பழைய மற்றும் புதிய சென்னை சாலை, கீழ்பஜார் தெரு, மேட்டுத் தெரு போன்ற பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர்.