உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இணைப்பு சாலையில் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

இணைப்பு சாலையில் மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சோழவரம்,:ஆத்துார் மேம்பாலத்தின் இணைப்பு சாலை பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு, மழைநீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.சோழவரம் அடுத்த காரனோடை - ஆத்துார் பகுதிகளுக்கு இடையே, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைந்துள்ளது.இந்நிலையில், மேம்பாலம் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.ஆத்துார் பகுதியில் பாலத்தின் இணைப்பு சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு,அதில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதில், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இரவு நேரங்களில் பள்ளங்களில் விழுந்து, வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.மேலும், பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் வளர்ந்துள்ளன. எனவே, இணைப்பு சாலையை சீரமைத்து, பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை