மேலும் செய்திகள்
குளித்தலை அரசு மருத்துவமனை கட்டுமான பணி நிறைவு
19-Sep-2025
திருத்தணி:திருத்தணியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நுழைவாயிலில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணி நகராட்சி, ஆறுமுக சுவாமி கோவில் தெருவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு தினமும் 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர, விபத்துகள் மற்றும் உயர்தர சிகிச்சைகளுக்கு, 24 மணி நேரமும் நோயாளிகள், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையின் நுழைவாயில் மற்றும் பழைய மருத்துவமனை கட்டடத்தின் நுழைவு பகுதியில், மழைநீர் செல்ல வடிகால்வாய் இல்லாததால், குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் நுழைவாயில் சேறும், சகதியுமாக இருப்பதால், நோயாளிகள் உள்ளே செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19-Sep-2025