உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புறம்போக்கு நிலத்தை அளக்க எதிர்ப்பு ராமநாதபுரம், அம்மம்பாக்கத்தில் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தை அளக்க எதிர்ப்பு ராமநாதபுரம், அம்மம்பாக்கத்தில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை:ராமநாதபுரம் ஊராட்சியில் சர்வே எண், 169ல் 87 ஏக்கர், 172 அம்மம்பாக்கத்தில், 57 ஏக்கர் நிலம் புறம்போக்கு நிலம் என்ற வகையில் உள்ளது. இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.ராமநாதபுரம் ஊராட்சியில் சுடுகாடு இல்லாததால், யாராவது இறந்தால் சம்பந்தப்பட்ட இடத்தில் புதைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் ராமநாதபுரம் வடிவேல், அம்மம்பாக்கம் பூபாலன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கில், கடந்தாண்டு அக்., மாதம், 20ம் தேதி மேற்கண்ட, 144 ஏக்கர் நிலத்தை மேற்கண்ட கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, தீர்ப்பு வழங்கியது.ராமநாதபுரம் கிராமத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் சார்பில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி சில தினங்களுக்கு முன் துவங்கியது. இதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.நேற்று சீத்தஞ்சேரி வனத்துறையினர் சார்பில் நிலத்தை அளக்க, வருவாய்த் துறையினர் சென்றனர். அங்கு வந்த இரண்டு ஊராட்சியை சேர்ந்த மக்கள் 'எங்களுக்கு சொந்தமான இடத்தை அளக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது' என, நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.கிராம மக்கள் அதிகளவில் கூடியதால் பதட்டமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து நிலம் அளப்பது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருவாய்த் துறை பதிவேட்டில் மேற்கண்ட, 144 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு என, வகைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை