உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்

 ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணி குண்டா, புத்துார் மற்றும் நகரி ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் மூலம் தமிழக ரேஷன் அரிசி கடத்தப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை அரக்கோணம் ரயில்வே போலீசார், திருத்தணி ரயில் நிலைய முதல் நடைமேடையில் சோதனை நடத்தினர். அப்போது, நடைமேடையில் பதுக்கி வைத்திருந்த, 25 கிலோ எடை கொண்ட, 2,300 கிலோ ரேஷன் அரிசி மூட்டை களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் தப்பினர் . பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டை களை, திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் மூலம், திருத்தணி நுகர்பொருள் வாணிக கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி