உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம்

இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் கிராமத்தில், 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. அந்த கடையில், 700 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருள் பெற்று வருகின்றனர். கடையின் மேற்பரப்பு மற்றும் உட்புறத்தில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை இருப்பதால், அங்கு ரேஷன் பொருள் வாங்க வரும் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக பாழடைந்த கட்டடத்தை இடித்து அந்த இடத்தில் புதிய ரேஷன் கடை நிறுவ வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி