உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் ஊழியர் பலி உறவினர்கள் மறியல்

தனியார் ஊழியர் பலி உறவினர்கள் மறியல்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டியைச் சேர்ந்தவர் ரமேஷ், 48. இவர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, நிறுவன வளாகத்தில் பின்நோக்கி வந்த லாரி மோதியது. இதில், படுகாயமடைந்த ரமேஷ், ரத்தினகிரி சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, அவரது உறவினர்கள் நேற்று சின்னநாகபூண்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். இதனால், சோளிங்கர் -- பொன்னை மார்க்கத்தில், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ