விழுப்புரம், கடலுாருக்கு நிவாரண பொருட்கள்
திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் மாவட்டத்திற்கு 24.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திருவள்ளூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.'பெஞ்சல்' புயல் காரணமாக, விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில் பலத்த சேதமடைந்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மூன்று வாகனங்களில், நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரிசி, பருப்பு, போர்வை, ஆடைகள் என, 24.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை, சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.