மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு வீடுகள் பரணிபுத்துாரில் அகற்றம்
17-May-2025
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், பழைய சென்னை மாநில நெடுஞ்சாலையில், சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டி வியாபாரம் செய்து வந்தனர். இதனால், நெடுஞ்சாலை துறையினர் சாலையை விரிவாக்கம் செய்ய முடியாததால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன.இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், கடைகளை காலி செய்யாமல் இருந்தனர்.நேற்று திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் தலைமையிலான நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டடங்களை இடித்து அகற்றினர்.அதேபோல், திருத்தணி நகராட்சி எல்லைக்குள், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களும் இடித்து அகற்றப்படும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
17-May-2025